காப்பரிசி
தேவையானவை:
பச்சரிசி - ½ கப்,
வெல்லம் - ½ கப்,
பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,
எள் - 2 டீஸ்பூன்,
ஏலத்தூள் - ½ டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய் பல்லாக கீறியது - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை கழுவி நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுத்து, எள்ளை வறுக்கவும். நெய்யில் தேங்காய் பல் வறுத்து, பொட்டுக்கடலை, ஏலத்தூள் சேர்த்து கலக்கவும்.வெல்லத்தை நீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து உருட்டும் பதம் வந்து பாகானதும், அதில் அரிசிக் கலவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆடிப்பூர நாளில் ஆண்டாளுக்கு நைவேத்யம் செய்யலாம். ஆடி 18க்கும் படைக்கலாம்.