முட்டைகோஸ் டோக்ளா
தேவையான பொருட்கள்
1கப் பொடியாக நறுக்கின முட்டைகோஸ் துருவல்
1/2கப் கடலை மாவு
1ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2ஸ்பூன் மல்லித்தூள்
1/2, ஸ்பூன் மஞ்சள்தூள்
1/4 ஸ்பூன் பெருங்காயம்
உப்பு தேவைக்கு
தாளிக்க
1ஸ்பூன் கடுகு
1/2, ஸ்பூன் வெள்ள எள்ளு,
1ஸ்பூன் எண்ணெய், கறிவேப்பிலை
1ஸ்பூன் ஈனோ
செய்முறை
ஒரு பவுளில் கடலை மாவு, மிளகாய் தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு தேவையான தண்ணி விட்டு நன்கு கலந்துக்கவும்.1ஸ்பூன் ஈனோ சேர்த்து குடெ கொஞ்சம் தண்ணி விட்டு நன்றாக கலக்கவும். அத்துடன் எடுத்து வைத்திருக்கும் முட்டைகோஸ் துருவல் சேர்த்து கலந்து எண்ணெய் தடவிய தட்டில் விட்டு ஆவியில் வேக வைத்து எடுத்துக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தத்தும் கடுகு, ஜீரகம், வெள்ள எள்ளு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து டோக்ளா மேல் கொட்டி துண்டு போடவும். சுவையான முட்டைகோஸ் டோக்ளா நிமிஷத்தில் தயார்.