முட்டைக்கோஸ் சட்னி
முட்டைக்கோஸ் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1/2
பூண்டு - 2 பல்
சிவப்பு மிளகாய் - 2
புளி - மிகச்சிறிய அளவு
உளுத்தம்பருப்பு - 1 மேஜைக் கரண்டி.
தாளிக்க: எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை
முட்டைக்கோஸை நன்றாக கழுவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உ.பருப்பை பொரிய விட்டு, சிவப்பு மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் கோஸைப் போட்டு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து இறக்கினால் முட்டைக்கோஸ் சட்னி தயார்.