வெண்ணெய் கச்சாயம்
வெண்ணெய் - 1 கப்,
பச்சரிசி - 3 கப்,
சர்க்கரை - 2 கப்,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.
செய்முறை:
பச்சரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து, நிழலில் உலர்த்தவும். பாதியளவு உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துச் சலிக்கவும். ஈரம் உலராமல் இருக்க, மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அழுத்திவைக்கவும்.வெண்ணெயை லேசாகப் பிசைந்து, அதனுடன் ஈர மாவைச் சேர்த்துப் பிசையவும். உருட்டும் பதம் வந்ததும் (தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்) ஒரு டபராவைக் கவிழ்த்துப் போட்டு மேலே ஒரு சிறிய ஈரத் துணியை விரிக்கவும். அதன் மேல் மாவை வடைபோல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொடித்த சர்க்கரையில் பொரித்த கச்சாயத்தைப் புரட்டி எடுக்கவும். இது எளிதில் செய்துவிடக்கூடியது. இதைச் செய்வதற்கு எந்தப் பதமும் கிடையாது, பாகு காய்ச்சும் வேலையும் இல்லை.