கத்தரிக்காய் ஊறுகாய்
தேவையானவை:
பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
வெந்தயப்பொடி, மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, (சிறிது சிறிதாக கிள்ளிக்கொள்ளவும்), எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை:
கத்தரிக்காயை கழுவி, துடைத்து, நீளவாக்கில் வெட்டவும். புளியைக் கெட்டியாக கரைத்து உப்பு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி சேர்த்து, கத்தரிக்காயில் சேர்த்து கிளறி ஒரு நாள் ஊற விடவும். பிறகு காயை மட்டும் வெயிலில் காயவைத்து, நல்லெண்ணெய் காய்ச்சி அதில் சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை தாளித்து, எண்ணெய் கலந்த கத்தரிக்காயில் சேர்த்தால் ஊறுகாய் ரெடி! அவ்வப்போது அப்படியே வெயிலில் வைத்து பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் வரை கெடாது.