பிரெட் புட்டு
தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 5,
சர்க்கரை-5 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
நெய் - 2 தேக்கரண்டி,
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை,
முந்திரி - 5, திராட்சை - 5.
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு, அடுப்பில் வைத்து முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்துவிட்டால் மணமான புட்டு தயார்.