கருப்பு உளுந்து அடை
கருப்பு உளுந்து-1 கப்
பச்சரிசி-1 கைப்பிடி.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1.
தேங்காய் துருவல்-1 கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பவுலில் 1 கப் கருப்பு உளுந்துக்கு 1 கைப்பிடிபச்சரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது அதை எடுத்து மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இப்போது கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து லேசாக வதக்கவும்.
இத்துடன் துருவிய தேங்காய் 1 கப் சேர்த்து லேசாக வதக்கி இதை அரைத்து வைத்திருக்கும் உளுந்துடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்த பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு மாவை கொஞ்சமாக எடுத்து தட்டி இரண்டு பக்கமும் நன்றாக பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான கருப்பு உளுந்து அடை தயார்.