பாகற்காய் வேர்க்கடலை வருவல்
தேவையான பொருட்கள்
இரண்டு பாகற்காய்
2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1/2 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
4 பல் பூண்டு
1காய்ந்த மிளகாய்
மஞ்சள்தூள்
தேவைகேற்ப உப்பு
கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி நீளவாக்கில் அரிந்த பாகற்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மிகவும் மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.நான் எனது சமையலில் பொரியல் செய்யும் பொழுது தேங்காய்க்கு பதில் வேர்க்கடலை சேர்ப்பது வழக்கம். வேர்க்கடலை சேர்த்தும் பொழுது ஒரு சில காய்கறிகளில் இருக்கும் சுவையை அதிகரிக்கும்.