பாகற்காய் முட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்
1பாகற்காய்
3முட்டை
1பெரிய வெங்காயம்
5சாம்பார் வெங்காயம்
1தக்காளி
1டீஸ்பூன் தனியாத்தூள்
1டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1/2டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/4கப் புளி கரைசல்
தேவையான அளவுஉப்பு
தாளிக்க:
1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/4டீஸ்பூன் கடுகு
1/8டீஸ்பூன் வெந்தயம்
2பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
மல்லி இலை
செய்முறை:
பாகற்காயை அரை வட்டமாக நறுக்கி,உள்ளே இருக்கும் சதை மட்டும் விதைகளை நீக்கவும். பின்னர் உப்பு,தண்ணீர் சேர்த்து கழுவி வைத்துக்கொள்ளவும்.புளிக்கரைசல் தயார் செய்து வைக்கவும்.
வெங்காயம்,சாம்பார் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து வதக்கவும்.பின்னர் அதே வாணலியில் வெந்தயம் சேர்த்து வதக்கி பொருந்ததும்,கடுகு,கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,குழம்பு மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள்,தனியாத் தூள்,உப்பு சேர்த்து கலந்து விடவும்.அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து கொதிக்க விடவும்.பின்னர் தயாராக வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும்.குழம்பு கொதிக்க தொடங்கியதும் முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்.கலக்காமல் மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.குறிப்பிட்ட நேரம் விட்டு திறந்தால் சுவையான பாகற்காய்,முட்டை குழம்பு தயார்.நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.சாதத்துடன் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.அனைவரும் செய்து சுவைத்து உங்கள் கமென்ட்ஸ் சை பதிவிடுங்கள்.