பயோட்டின் ஸ்மூத்தி
கறுப்பு அல்லது வெள்ளை எள் - 1 தேக்கரண்டிமுந்திரி,
வேர்க்கடலை, பூசணி விதைகள், ஆளி விதைகள் - அனைத்தும் சேர்த்து 1 தேக்கரண்டி
முலாம்பழ விதைகள், சூரியகாந்தி விதைகள் - இரண்டும் கலந்து 1 தேக்கரண்டி
பிஸ்தா - 4
பாதாம் - 5
அத்திப்பழம் - 2
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது ) - 4
வாழைப்பழம் - 1
ஆப்பிள் - பாதி வெட்டியது
பீட்ரூட் - பாதி அளவு (தேவைப்பட்டால்).
செய்முறை:
எள், ஆளி விதை, முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகள், பாதாம், பிஸ்தா, சூரியகாந்தி விதை, முலாம்பழ விதைகள் மற்றும் அத்திப்பழத்தை தனித் தனியே இரவு முழுவதும் ஊறவிடவும். அதேபோல், பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். ஆப்பிள், அத்திப்பழம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் மற்றும் பீட்ரூட் தேவைப்பட்டால் அத்தனையும் சேர்த்து எல்லாவற்றையும் சிறு துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பின் ஊற வைத்த நட்ஸ் வகைகளையும் சேர்த்து அரைக்கவும்.