பீட்ரூட் சாதம்
தேவையானவை
அரிசி சாதம் - 2 கப்
பீட்ரூட் நறுக்கியது - கால் கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய்- 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிது.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். பின்னர், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியதும். சிறிதளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் மூடி வைக்கவும். பீட்ரூட் நன்கு வதங்கியதும், அதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும். பின்னர், சிறிது கொத்துமல்லி தூவி விடுங்கள். பீட்ரூட் சாதம் தயார்.