பீட்ரூட் தொடுகறி
தேவையான பொருட்கள்
300கிராம் பீட்ரூட்
1பச்சை மிளகாய் 1 காய்ந்த மிளகாய்
4ஸ்பூன் தேங்காய் துருவல்
1துண்டு இஞ்சி
2ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1ஸ்பூன் கடுகு
1கொத்து கருவேப்பிலை
கால் கப் தயிர்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக அல்லது துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காய் சீரகம் இஞ்சி பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு பீட்ரூட்டை நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும். பீட்ரூட் முக்கால் பதம் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.இப்பொழுது பீட்ரூட் கலவை நன்கு வெந்து வந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு தயிரை சேர்த்து நன்கு கலந்து கடுகு கருவேப்பிலை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாற அற்புதமான பீட்ரூட் தொடுகறி ரெடி. இந்த தொடுகறி எந்தவித சாதத்திற்கும் சைடு டிஷ்ஷாக சாப்பிடுவதற்கு பொருத்தமாக இருக்கும்.