பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்
2பீட்ரூட்
2 வெங்காயம்
2 தக்காளி
2பச்சை மிளகாய்
பட்டை கிராம்பு தாளிக்க
50 கிராம் பொட்டுக்கடலை
கருவேப்பிலை தேவையான அளவு
கொத்தமல்லி தேவையான அளவு
தேங்காய் ஒரு மூடி
உப்பு தேவைக்கேற்ப
2 ஸ்பூன் மல்லி தூள்
2 ஸ்பூன் கரம் மசாலா
2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
புதினா தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் போட்டு தாளிக்க வைத்து பின்பு கருவேப்பிலை புதினா போட்டு நன்கு கிளறவும்.பின்பு அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதக்கிய பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் ஒரு மூடி அரைத்து வைத்துக் கொள்ளவும்.பீட்ரூட்டை தோல் நீக்கி நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.பீட்ரூட் கோலா உருண்டை செய்வதற்கு மிக்ஸியில் பொட்டுக்கடலை துருவிய தேங்காய் மிளகாய் தூள் மல்லித் தூள் இஞ்சி பூண்டு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் கீறி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் உருட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயை காய வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் உள்ள குழம்பு நன்கு கொதித்த பின் ஸ்பைசி யான கோலா உருண்டை அதனில் போட்டு அடுப்பை அணைக்கவும். பின் அதை சூடான சாதத்தில் பரிமாறவும்.