பேடா (பஞ்சாப்)
தேவையானவை:
Advertisement
கோவா, பால் - தலா ½ கப்,
சர்க்கரை - ¾ கப்,
குங்குமப்பூ - சிறிதளவு,
பாதாம் (மெல்லியதாக சீவியது) - 4 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்.
உலர் பழ வகைகள் - சிறிதளவு.
செய்முறை:
அடிகனமான கடாயில் கோவாவை உதிர்த்துப் போட்டு சர்க்கரை கலந்து பால் விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். நன்கு கலந்ததும் ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ இலைகள், பாதாம் துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கெட்டியாக உருட்டும் பதம் இருக்குமாறு பார்த்து இறக்கி, உருண்டைகளாகச் செய்து நடுவில் லேசாக அழுத்திவிட்டு உலர் பழங்கள் வைத்து அலங்கரிக்கவும்.
Advertisement