பார்லி சூப்
Advertisement
பார்லி - ½ கப்,
பூண்டு பற்கள் - 3,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
சோம்பு - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை:
பார்லியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பார்லியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பார்லி ஓரளவு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் வடிகட்டி கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் சோம்பு சேர்க்கவும். நறுக்கிய பூண்டு பற்களையும் சேர்க்கவும். பூண்டு வதங்கியதும் பார்லித் தண்ணீரை சேர்க்கவும். தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும். விருப்பமுள்ளவர்கள் மிளகுத்தூள் சேர்க்கலாம்.
Advertisement