வாழைத்தண்டு சூப்
நறுக்கிய வாழைத்தண்டு - ½ கப்,
பூண்டு - 4 பற்கள்,
உப்பு - சிறிதளவு,
பால் - ¼ கப்,
கார்ன்ப்ளவர் - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிதளவு,
மிளகு தூள் - சிறிதளவு,
சூப்ஸ்டிக் - சிறிதளவு (பேக்கரியில் கிடைக்கும்),
பிரெட் துண்டுகள் - 2 (சதுரமாக வெட்டி நெய்யில் பொரித்தெடுத்தது),
சர்க்கரை - சிட்டிகை.
செய்முறை:
வாழைத்தண்டு நறுக்கி உப்பு, ½ கப் நீர், பூண்டு போட்டு குக்கரில் வேகவிட்டு, அரைத்து வடிகட்டவும். சூடான பாலில் கார்ன்ப்ளவர் கரைத்து சிறிது நீர் சேர்க்கவும். வாணலியில் வெண்ணெய் உருக விட்டு கார்ன்ப்ளவர் கரைசல், நீர், வாழைத்தண்டு சாறு, சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்து கிளறி, சூப் கப்பில் விட்டு மேலே பொரித்த பிரெட் துண்டுகள், சூப்ஸ்டிக் வைத்து பரிமாறவும். இதற்கு சீசன் என்பதே கிடையாது. எக்காலத்திற்கும் ஏற்றது. குறிப்பாக இரவு வேளையில் டின்னருக்கு ஏற்ற சிறந்த சூப்.