வாழைத்தண்டு பஜ்ஜி
நறுக்கிய நாரில்லா இளம் வாழைத்தண்டு வில்லைகள் - 15,
உப்பு - சிறிது,
பெருங்காயம் பொடி - சிறிது,
ஓமம் - ¼ டீஸ்பூன்.
ஊறவிட்டு அரைக்க:
அரிசி - 50 கிராம்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்,
சிவப்பு மிளகாய் - 5,
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை ½ மணி நேரம் ஊறவிட்டு, சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூளுடன் கண்மை போல் மெத்தென்று தோசை மாவு பதத்தில் அரைத்து வழித்து ஓமம் சேர்க்கவும். சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் வாழைத்தண்டு வில்லைகளை அரைத்த மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து வடிகட்டி சூடான மசாலா டீயுடன் பரிமாற சாப்பிட அம்புட்டு ருசி.