வாழைக்காய் பொடி பொரியல்
3வாழைக்காய்
2டேபிள் ஸ்பூன்தனியா
1 டேபிள்ஸ்பூன்க.பருப்பு
1டேபிள்ஸ்பூன்உ.பருப்பு
1 டேபிள்ஸ்பூன்பச்சரிசி
12சி.மிளகாய்
1டீஸ்பூன்பெருங்காயம்
1டீஸ்பூன்கடுகு
1டீஸ்பூன்ம.தூள்
2ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
ருசிக்குஉப்பு
1 ஆர்க்குகறிவேப்பிலை
தேவையான அளவுதே.எண்ணெய்
தேவைக்குதண்ணீர்
செய்முறை
வாழைக்காயை தோல் நீக்கி வட்டவடிவில் நறுக்கி தண்ணீரில் போடவும். வெறும் கடாயில் க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய்,தனியா ஆகியவற்றை போடவும்.பிறகு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.ஆறினதும் மிக்ஸியில் போடவும்.வெறும் கடாயில் பச்சரிசியை போடவும்.அதையும் சிவக்க வறுக்கவும்.வறுத்த அரிசி ஆறினதும் அரிசியையும் மிக்ஸியில் போடவும்.அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.கடாயில் தே.எண்ணெய் விடவும்.எண்ணெய் காய்ந்ததும், கடுகு,க.பருப்பு,உ.பருப்பு போடவும்.பருப்புகள் சிவந்ததும்,வாழைக்காயை போட்டு அதில் உப்பு,ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் போடவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.பின்பு மூடி வேக விடவும்.வெந்ததும்,பெருங்காயத்தூள்,வறுத்த பொடி,கறிவேப்பிலை போடவும்.பின் நன்கு ஒன்று சேர கலக்கவும்.நன்கு ஃபிரை ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்.வாழைக்காய் பொடி பொரியல் தயார்.