வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா
தேவையான பொருட்கள்
2மீடியம் சைஸ் வாழைக்காய்
3/4 டீ ஸ்பூன்ம.தூள்
2 டீ ஸ்பூன்வறுத்து அரைத்த மிளகு தூள்
1 டீ ஸ்பூன்சீரகத் தூள்
3/4 டீ ஸ்பூன்சோம்பு தூள்
1/2 டீ ஸ்பூன்தனியா தூள்
1 ஸ்பூன்தனி மிளகாய் தூள்
ருசிக்குஉப்பு
தாளிக்க:-
1 டீ ஸ்பூன் கடுகு
3/4 ஸ்பூன்உ.பருப்பு
1/2 ஸ்பூன்க.பருப்பு
2சி.மிளகாய்
2 ஆர்க்குகறிவேப்பிலை
2 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள்
2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
தேவையான அளவுதண்ணீர்
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில் மிளகு, சீரகம், சோம்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸி ஜாரில் பொடிக்கவும்.வாழைக்காயை தோல் சீவி, சற்று தடிமனாக, வட்டமாக நறுக்கி தண்ணீரில் போடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.எண்ணெயிலேயே, ம.தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், சேர்த்து நன்கு பொரிய விடவும்.பொரிந்ததும், வாழைக்காய், மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும்.ஒன்று சேர குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். மேலே கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வாழைக்காய் பெப்பர் மசாலா சுக்கா தயார்.