கேழ்வரகு வாழைப்பூ பொங்கல்
கேழ்வரகு - 1 கப் (நன்றாக 8 மணி நேரம் ஊறியது),
புழுங்கல் அரிசி - 1 கப் (ஊறவைத்தது),
நெய் - 3 டீஸ்பூன்,
ஏலக்காய் - 2,
நறுக்கிய வாழைப்பூ - ½ கப்,
பட்டை - 1 சிறு துண்டு,
ஜாதிக்காய் - சிறிது,
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
பட்டை, சோம்பு - பொடித்தது 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டுக் காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, ஜாதிக்காய் தாளித்து, பின் இஞ்சி-பூண்டு விழுது, பட்டை, சோம்பு, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். பின் ஊறவைத்த புழுங்கல் அரிசி, கேழ்வரகு சேர்த்து சிறு தீயில் நன்றாக வதக்கவும். நீர் சுண்டியதும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அரிசியும், நீரும் ஒரே மட்டத்திற்கு வரும் போது நல்லெண்ணெயில் நன்கு வறுத்த வாழைப்பூவையும், உப்பு சேர்த்து கேழ்வரகு கலவையில் கலந்து வேகவிடவும். நன்றாக குழைந்து வெந்தப்பின் பரிமாறவும். இது ஒரு வித்தியாசமான ‘கேழ்வரகு வாழைப்பூ பொங்கல்’. இது சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடக்கூடிய சத்தான பொங்கல்.