வாழைக்காய் வறுத்த கறி
வாழைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
பட்டை, லவங்கம், சோம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ - தாளிக்க
தக்காளி - 2
முந்திரி - 10
புதினா - ஒரு பிடி
கொத்தமல்லி - 1 பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து.
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், சோம்பு, பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து வெடித்தவுடன் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, முந்திரி ஆகியவற்றை பேஸ்ட் ஆக அரைத்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் சேர்க்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காஷ்மீரி மிளகாய்த் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள், மட்டன் மசாலா, வறுத்த வாழைக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். சுவையான வாழைக்காய் வறுத்த கறி தயார்.