சுட்ட கத்திரிக்காய் தொகையல்
1 கத்திரிக்காய்
1 வெங்காயம்
2பச்சை மிளகாய்
1 முழு பூண்டு
2தேக்கரண்டி ஸ்பைஸ் மிக்ஸ் (சீரகம், ஓமம், மிளகு, தநியா வறுத்து பொடித்தது)
¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி
1தேக்கரண்டி புளி பேஸ்ட்
1 மேஜைகரண்டி பொடித்த வெல்லம் (ஆப்ஷனல்)
தேவையானஉப்பு
தாளிக்க :
2தேக்கரண்டி எண்ணை
1தேக்கரண்டி கடுகு
1மேஜைகரண்டி உளுந்து
1தேக்கரண்டி சீரகம்
¼ கப் கறிவேப்பிலை
சிட்டிகை பெருங்காயம்
2 வர மிளகாய்
செய்முறை:
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். கத்தியால் கத்திரிக்காய் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள், 2 கீரளில் மிளகாய் சொறுகிக்கொள்ளுங்கள். வெங்காயம் மேல் ஆழமாக நீளமாக 4-5 இடத்தில் கீறிக்கொள்ளுங்கள், மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்டேண்ட் வைத்து பூண்டு, மிளகாய், வெங்காயம் க்ரில் செய்க (சுடுக). இடுக்கியால் tongs பிடித்து அப்போ அப்போ திருப்பி க்ரில் செய்க. தோல் கருகிய பின் எடுத்து ஆற வைக்க. பின் தோல் உரிக்க. தோலுரித்த பொருட்களை ஒரு போலில் சேர்க்க. மேஷ் செய்க. சுத்தமான கையால் அல்லது ஸ்பூனால் நன்றாக மேஷ் செய்யலாம். புளி, உப்பு, மஞ்சள் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் பொடி சேர்த்து மிக்ஸ் செய்க. விருப்பமானால் பொடித்த வெல்லம் சேர்த்து மிக்ஸ் செய்க.மிதமான நெருப்பின் மேல் சாஸ்பேனில் 1 மேஜைகரண்டி எண்ணை சூடானதும் கடுகு சேர்க்க, பொறிந்ததும் உளுந்து சீரகம், கறிவேப்பிலை சேர்க்க. பெருங்காயப்பொடி போட்டு அணைக்க. தாளித்த பொருட்களை தொகையல் கூட சேர்க்க. ருசிக்க. சாதம், தோசை, சப்பாத்தி, அடை, அல்லது உப்புமா. பொங்கல் கூட பரிமாறுக.