அவல் உருண்டை
தேவையானவை:
அவல் - 1 கப்,
பொட்டுக்கடலை - ½ கப்,
நெய் - ½ கப்,
தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய்தூள் - ½ டீஸ்பூன்,
முந்திரி - 10, கிஸ்மிஸ் - 10.
செய்முறை:
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். முந்திரி பொடித்து, கிஸ்மிஸ் சேர்த்து வறுக்கவும். சலித்த மாவு, சர்க்கரை, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். நெய்யைச் சூடாக்கி கலந்த மாவில் ஊற்றி சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.