ஆப்பிள் பேடா
தேவையான பொருட்கள்
1.5 கப் பால் பவுடர்
0.5 கப் சர்க்கரை
0.5 கப் தண்ணீர்
1ஸ்பூன் நெய்
அலங்கரிக்க
10கிராம்பு
சிகப்பு புட் கலர்
பிரஷ்
10 பிஸ்தா
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும்.மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்ஐந்து நிமிடம் கொதித்தவுடன், ஒட்டும் பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து பால் பவுடர் சேர்க்கவும். கை எடுக்காமல் கலக்கவும்.பாத்திரத்தில் இருந்து சுருண்டு வந்தவுடன் நெய் சேர்த்து இறக்கவும்.ஆப்பிள் வடிவத்தில் உருண்டைகளாக பிடிக்கவும்.சிகப்பு புட் கலரை வைத்து பிரஷ் பண்ணவும்.கிராம்பு மற்றும் பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.