பாதாம் உருளைக்கிழங்கு கட்லெட்
தேவையானவை
சீவிய பாதாம் துருவல் - 1கப்
கார்ன்ஃப்ளார் - 1 தேக்கரண்டி
பாதாம் விழுது - அரை கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப.
கட்லெட் செய்வதற்கு
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
பிரெட் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
மசாலாவிற்கு:
பொடியாக நறுக்கிய கேரட்,
குடைமிளகாய், பீன்ஸ் அனைத்தையும் சேர்த்து - 1 கிண்ணம்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி.
சாஸ் செய்வதற்கு
விதையற்ற பச்சை திராட்சை - அரை கப்
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சாட் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி.
செய்முறை:
பாதாம் பருப்பை ஊற வைத்து அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேரட், பீன்ஸ், குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கில் பிரெட்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மாவாக பிசையவும். பிசைந்த மாவை சிறிய கிண்ணமாக செய்து காய்கறி மசாலா கலவையை ஸ்டஃப் செய்து நன்றாக மூடவும். இதை பாதாம் விழுதில் தோய்த்து பாதாம் சீவலில் புரட்டி எடுத்து சூடான எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை திராட்சையை மிக்ஸியில் அடித்து, அதில் கொத்துமல்லித்தழை, சாட் மசாலாதூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.