அக்கார அடிசில்
தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
பொன்னி அரிசி - 1 கப்
பால் - 8 கப்
கண்டேன்ஸ்ட் பால் - 1/2 கப்
குங்குமப்பூ - 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் 3 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - ½ கப்
உலர்ந்த திராட்சை - 1/4 கப்
முந்திரி - ½ கப்.
செய்முறை
ஒரு கிண்ணத்தில் 2 கப் கொதிக்கும் பாலில் அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய்யில் பாசி பயிறை பொன்னிறமாக வறுக்கவும். 1 கப் பால்சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அதை அரிசி பாலுடன் சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்கவும். பிரஷர் இறங்கிய பின் வெளியே எடுக்கவும்.குங்குமப்பூவை 1 மேஜை கரண்டி கொதிக்கும் நீரில் ஊற வைக்கவும். மிதமான நெருப்பின் மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் குக்கரில் வெந்த சாதத்தை சேர்க்கவும். 4 கப் கொதிக்கும் பால் சேர்க்கவும். கொதித்த பின் அனலை சிறிது குறைக்கவும். நன்றாக கொதிக்கட்டும். குங்குமப்பூ சேர்க்கவும். அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும். பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். கண்டேன்ஸ்ட் பால் ஊற்றி கிளறவும். மீதி 1 கப் பால் சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். நெருப்பை குறைக்கவும். பால் மேலும் 15 நிமிடங்கள் கொதித்து
சுண்டட்டும்.வெல்லம் சேர்க்கவும். மேலும் 5 நிமிடங்கள் கொதித்து சுண்டட்டும். சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். நெய் சேர்க்க. அடுப்பை அணைக்கவும்.மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க வெண்ணெய் சேர்க்கவும். உறுகியவுடன் நெருப்பை குறைத்து முந்திரி, திராட்சை வறுக்கவும். 1-2 நிமிடங்கள் திராட்சை உப்பும், முந்திரி வறுத்து அக்கார அடிசலுடன் சேர்க்கவும். அழகிய நிறம், மிகுந்த சுவை கொண்ட அக்கார அடிசல் தயார்.