துத்திக்கீரை கூட்டு
தேவையானவை:
துத்திக்கீரை - 2 கப்,
காய்ந்த மிளகாய் - 2,
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்,
புளி - ஒரு கோலி குண்டு,
பெரிய தக்காளி - 1,
உப்பு - திட்டமாக,
சின்ன வெங்காயம் - 10,
வெந்த பருப்பு - ¼ கப்.
தாளிக்க:
கடுகு - ½ ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 ஸ்பூன்,
பெருங்காய பொடி - ¼ ஸ்பூன்,
துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பொடியாக அரிந்த துத்திக்கீரை, தக்காளி சேர்த்து வதக்கி நீரூற்றி வேக விடவும். நன்கு வெந்ததும் சாம்பார் பொடி, புளி சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய் அரைத்து, பருப்புடன் சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும். மிளகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து போடவும். சுகருக்கு நல்லது.