திண்டிவனம்-இறையனூர் மங்களேஸ்வரர் திருக்கோயில்!
ஜோதிடத்தில் எந்தப் புள்ளியிலிருந்து இயக்கம் தொடங்குகிறது. எந்தப் புள்ளி இயக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிந்து, அந்தப் புள்ளியின் இறை வடிவத்தை நாம் அடையும் பொழுது இயக்கமும் தொடங்குகிறது. இதற்கு நாம் அறிந்தும் புரிந்தும் கொள்வது காலமானம், வர்த்தமானம் ஆகும். இயக்கத்தை இயற்கையிலிருந்து தொடங்குவதே இறையின் அவசியம் என்பதை உணர்வோம்... இந்திரலோகத்தில் ரம்பை மற்றும் ஊர்வசியுடன்...
துயர் தீர்ப்பார் திருத்தளிநாதர்
ஒரு கோயிலின் பெயரையே தமது திருப்பெயராக ஈசன் ஏற்றுக்கொண்ட பெருமை கொண்ட தலம்தான் திருத்தளி. ‘தளி’என்றால் கோயில், ‘நாதர்’ என்றால் இறைவன் என்று பொருள்படும். சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளி கௌரி தாண்டவம் ஆடி, அம்பிகைக்கு அருள்புரிந்த இத்தலத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஈசன் தேவியுடன் தனிமையில் இருந்த தருணத்தில் விளையாட்டாக அம்பிகையின் கரிய நிறத்தை சுட்டிக்காட்டி...
சிவாலயங்களில் அமைந்துள்ள முருகனின் உலாத்திருமேனிகள்
சிவாயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களிலும் முருகப் பெருமானைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும், கிருத்திகை, உத்திரம், சஷ்டி ஆகிய பருவ விழாக்களிலும் பெருந்திருவிழாக் களிலும் வீதியுலா காண்பதற்கென முருகனின் பல வகையான உலாத்திரு மேனிகள் எழுந்தருள வைக்கப்பட்டுள்ளன. இதில் முதன்மை பெற்றது வள்ளி, தெய்வானையருடன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டவராகக் காட்சி தரும் முருகப் பெருமானின் திருவுருவமாகும்....
திருவல்லிக்கேணி கண்டேனே!
தலைநகர் சென்னை கடற்கரைக்கு அருகே நகரின் நடுவே எழிலோடு அமைந்துள்ளது, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்த சாரதி கோயில். பிருந்தாரண்யம், அல்லிக்குளம் என்று வேறு பெயர்களும் உண்டு. அல்லிமலர்கள் நிரம்பிய இந்தக் குளத்தை உடைய ஊர் என்பதால் திருஅல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. ஆலயம், ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிராகாரம் கொண்டது. மூலவர் வேங்கட கிருஷ்ணன்...
குரு பெயர்ச்சி பரிகார தலங்கள்
அயப்பாக்கம் சென்னை அயப்பாக்கம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அங்கே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திதான். அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? பிரமாண்டம்தான். 16 அடி உயர மூர்த்தி இவர். குருபகவானின் இயல்புப்படியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்களின் அனுபவம். அகரம் கோவிந்தவாடி காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம்...
பட்டீஸ்வரர் திருக்கோயில்
திருத்தலங்கள் அவற்றின் அற்புதங்களுக்குள் பல அதிசயங்களும் சூட்சுமங்களும் ஒளிந்துள்ளன. புராணங்களும் கதைகளும் நமக்கு ஒரு திருத்தலத்தில் இருக்கின்ற ஆற்றல்களையும் அதிசயங்களையும் சொல்கின்றன. அவற்றை அறிந்து அதற்கு ஏற்றாற் போல தெய்வங்களை வழிபட்டால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை உணரலாம். ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலை செய்து சோர்வு ஏற்பட்டு கண்ணயர்ந்துவிட்டார். இதையறிந்த திருமால்...
சப்த குரு தலத்தில் குரு பெயர்ச்சி விழா
*பிச்சாண்டார் கோயில் - திருச்சி திருச்சி - சேலம் பிரதான சாலையில் கொள்ளிடம் டோல்கேட் அருகில் பிச்சாண்டார் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோயிலானது, அருள்மிகு ஞான சரஸ்வதி சமேத பிரம்மதேவர், பூரண வல்லித் தாயார் சமேத புருஷோத்தமப் பெருமாள், சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாடனேஸ்வரர் ஆகிய முப்பெரும் தேவியர் உடனுறை மும்மூர்த்திகள் தனித்தனி சந்நதிகளில்...
அர்சிக்கெரே சிவாலயம்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: ஹொய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளன் (பொ.ஆ.1220) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.காலம்: `அர்சிக்கெரே’ என்ற ஊரின் பெயருக்கு அரசியின் ஏரி (கெரே) என்று பொருள். சந்திரமௌலேஸ்வரா கோயில் - `ஈஸ்வரன் கோயில்’ அல்லது `சிவாலயா’ என்றும் அழைக்கப்படுகிற இக்கோயில், ஹொய்சாளர் கோயில்களின் வரிசையில் ஒரு அரிய கட்டடக்கலை அதிசயமாகும். 16 முனைகள் கொண்ட...
குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்!!
பிரபஞ்சத்தின் சக்தியாக பஞ்சபூதங்கள் உள்ளன. அவ்வாறே பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் என அனைத்து வடிவங்களாகவும் இறைவனும் இறைவியும் உள்ளனர். அதற்குள்ளும் சூட்சும வடிவமாக கிரகங்களும் பொதிந்துள்ளன என்பதே சக்திக்குள் அடங்கியிருக்கின்ற சக்திகளை அறிந்து கொள்வதாகும். இதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சக்திகள் இணைவாக இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்கள் இறை...