வாகைச்சாத்து ஏன்?
கோயில்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அபிஷேகம்-அர்ச்சனை எனப் பல விதங்களிலும் பொதுவாக இருக்கும்.ஆனால் ஒருசில கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், அந்தக் கோவிலுக்கு மட்டுமே உண்டானதாக இருக்கும்.அப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் ஒன்று- ‘வாகைச்சாத்து’!வாகைச்சாத்து என்பது, குருவாயூர்-குருவாயூரப்பன் கோவிலுக்கு மட்டுமே உண்டானது. ‘வாகைச்சாத்து’ - என்பது, குருவாயூரப்பனுக்குச் செய்யப்படும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அறிந்து அனுபவிக்க வேண்டிய அதை...
ஏன்? எதற்கு ? எப்படி ?
?ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்? - த.நேரு,வெண்கரும்பூர். வெற்றிலைக் கொடியை நாகவல்லி என்று அழைப்பார்கள். வல்லி என்றால் கொடி என்று பொருள். ராம - ராவண யுத்தம் முடிவிற்கு வந்ததும் ராமபிரான் வெற்றி பெற்ற செய்தியை அசோக வனத்தில் இருந்த சீதையிடம் சென்று தெரிவித்தார், ஆஞ்சநேயர். ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற சீதாதேவி, அனுமனுக்கு...
விதியை மதி வெல்லுமா?
விதியா மதியா? விதியை மதி வெல்லுமா? அல்லது விதிப்படிதான் வாழ்ந்தாக வேண்டுமா? இந்தக் கேள்விகள் நம் மனதில் தோன்றும். ஆனால் விடை?என்னுடைய பெரியப்பாவின் மகன். ஒரு நாள் தன்னுடைய பணி நிமித்தமாக பக்கத்தில் இருந்த ஊருக்குப் போய்விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்..சாப்பாடு தயாராக இருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய உடல் நிலையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தார்....
துன்பமில்லா இடமும் உண்டோ?
ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் துன்பமானது வந்தே தீரும். இந்த துன்பத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. துன்பம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டோ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துக்கங்கள். மனிதனின், ஜீவாத்மாவின் மிக பெரிய குறி - நோக்கம் (aim) இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என்பதே...சுகத்திற்குள்ளும் துக்கமே...
தெளிவு பெறுஓம்
?குளிகையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? - ஆதிகேசவன், தர்மபுரி. குளிகை என்பது பெரும்பாலும் சுபகாரியங்களைச் செய்வதற்கான நேரம் என்று சொல்வதைவிட, அசுபக் காரியங்களைச் செய்யக்கூடாத நேரம் என்று சொல்லலாம். காரணம், இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் அதை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டி இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். அதனால்தான் இறுதிச்...
தெளிவு பெறுவோம்
?சமயத்தில் சிலர் செய்யும் உதவி நமக்குப் பெருத்த ஆறுதலை அளிக்கிறது. அப்போது அவரைப் பார்த்து ‘சரியான நேரத்தில் கடவுள் போல வந்து காப்பாற்றினாய்’ என்று சொல்கிறோம். அப்படியானால் ஆபத்து நேரத்தில் கடவுள் வந்து காப்பாற்றுவாரா? - ஆர். நாகராஜன், பாண்டிச்சேரி. ஆபத்து சமயத்தில்தான் என்றில்லை, எப்போதுமே கடவுள் நம்முடன் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்....
?கல்யாணம் ஆன பெண்கள் கட்டாயம் மெட்டி அணிய வேண்டுமா?
- ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு. ஆம். கட்டாயம் அணிய வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, திருமணம் ஆன ஆண்களுக்கும் கால்விரல்களிலே அணிந்துகொள்ளும் மிஞ்சி என்ற ஆபரணம் என்பது உண்டு. ஒரு ஆண்மகன் தலைநிமிர்ந்து நடப்பான், பெண்கள் தலைநிமிராமல் நடப்பார்கள் என்பதால் அக்காலத்தில் இந்த நடைமுறையை வைத்திருந்தார்கள். அதாவது எதிரே ஒரு பெண் வரும்போது அவள் நெற்றி வகிட்டில் இருக்கும்...
?அமாவாசையன்று உணவகங்களில் சில்வர் தட்டில் சாப்பிடுவது சரியா?
ஏ.முனியசாமி, காவாகுளம். அமாவாசையன்று உணவகங்களில் சாப்பிடுவது என்பதே சரியல்ல. இதில் சில்வர் தட்டில் சாப்பிட்டால் என்ன, இலையில் சாப்பிட்டால் என்ன? அமாவாசை நாள் அன்று வீட்டில்தான் சமைக்க வேண்டும். சமைத்த உணவினை முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபட்ட பின் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு அதன் பின்னரே சாப்பிட வேண்டும். வேறுவழியின்றி உணவகங்களில்தான் சாப்பிட்டாக வேண்டும் என்ற...
தெளிவு பெறுவோம்
?யாகங்கள் மூலமாக நாம் செலுத்தும் பொருட்கள் கடவுளை போய்ச் சேருமா? - லலிதா சுப்பிரமணி, குடியாத்தம். நிச்சயம் போய்ச் சேரும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தியாவிலிருக்கும் தம் உறவினருக்குப் பணம் அனுப்புகிறார். அங்கே டாலரில் அவர் செலுத்தும் பணம் ரூபாயாக மாற்றப்பட்டு, இங்கே இந்தியாவில் இருப்பவருக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதேபோலத்தான் யாகமும். யாககுண்டத்தில் நாம் இடும்...