விழுப்புரம்: 'விழுப்புரம் மாவட்டம் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது; புயல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள், அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள், 8 மாநில பேரிடர் குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணி மேற்கொண்டுள்ளது' என விழுப்புரத்தில் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.