இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்திருந்ததால் பரபரப்பு
Advertisement
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூர் செல்லும் பரசுராம் விரைவு ரயிலின் லேகோ பைலட், தண்டவாளத்தில் கற்கள் இருந்ததை பார்த்து ரயிலை நிறுத்தினார். இரணியல் ரயில் நிலைய அதிகாரிக்கு அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் கற்களை அகற்றினர். தண்டவாளத்தில் கற்கள் வைத்தது யார் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement