தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரன் நகர், அபிராமி அம்மன் கோயில் தொடங்கி கருணாநிதி தெரு, சாய் நகர், பெரியார் தெரு, ஜி.கே.எம் காலனி, வ.உ.சி தெரு, நாராயண தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, பெரியார் நகர் வெங்கட்ராமன் சாலை தொடங்கி கந்தசாமி சாலை, கார்த்திகேயன் சாலை, ஜவகர் நகர், கே.சி.கார்டன், ஆண்டாள் அவென்யு, சக்திவேல் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஒன்றிய பாஜ அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால்தான் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு உற்சாக வரவேற்பை அளிக்கின்றனர்.

எங்களை பொறுத்தவரை பிரசாரம் தொடங்கி இன்று வரை எங்களை மிகுந்த உற்சாகத்தோடு பொதுமக்கள் வரவேற்கின்றனர்.

அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது பிரச்னைகளை எங்களிடம் கூறுகிறார்கள். அதனை நாங்கள் சரி செய்து தருவோம் என அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அதனால் மக்கள் எங்களுக்கு உற்சாகமான வரவேற்பை அளிக்கின்றனர். இதனை பார்க்கின்றபோது எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை தென் சென்னைக்கு நிகராக உயர்த்தி காட்டுவேன். மேலும் வட சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என பல புகார்கள் வந்துள்ளன‌. அதனை இரும்பு கரம் கொண்டு கண்டிப்பாக ஒடுக்க பாடுபடுவேன் என பேசினார்.

வாக்கு சேகரிப்பின்போது மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.