ஐடிபில் பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே கேஸ் பைப் லைன் பதிக்கும் பணியை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவது நல்லதுதான். ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும். தற்பொழுது ஐடிபில் பெட்ரோலிய நிறுவனம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.
இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், விவசாய பாதுகாப்பு இயக்கமும் தொடர்ந்து போராடி வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டதை ஐடிபில் நிறுவனம் கைவிட்டு மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.