தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எண்ணெய் வழியும் சருமத்திற்கு 8 டிப்ஸ்

என்ன செய்துப் பார்த்தும் எண்ணெய் வழியுற முகம் மட்டுமே என்று அலுத்துக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. இதோ இயற்கையிலேயே மிகச்சிறந்த எட்டு டிப்ஸ்கள்.

*தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.

*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் சந்தனம் அரைத்துப் பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மைகுறையும்.

*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்தின் பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

*வெள்ளரிக் காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக்காணப்படும்.

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக பயத்த மாவு பயன்படுத்தலாம். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளப்பாகும்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய்ச்சுரப்பது குறைந்துவிடும்.மேலும் கேரட்டால் பொன் நிறமான சருமம் கிடைக்கும்.

*வெள்ளரிச் சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக் கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவ எண்ணெய்ப் பசை முகத்திற்கு குட்பை சொல்லலாம்.

*கஸ்தூரி மஞ்சள், சந்தனம் சேர்த்து முகத்தில் தடவ எண்ணெய்ப் பசை மறைவதோடு, எண்ணெய்ப் பசையால் உண்டாகும் பருக்களும் சேர்ந்து சரியாகும்.

 

Related News