தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வாசகர் பகுதி - மருந்தாகும் சுக்கு, மிளகு, திப்பிலி

நன்றி குங்குமம் தோழி

*சுக்கு, மிளகு, அதிமதுரத்தை நீரில் இட்டு ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்தால் இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும்.

*சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

*ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் விட்டு பாதியாக காய்ச்சி பால், சர்க்கரை ேசர்த்து இருவேளை சாப்பிட்டு வர வாயு அகலும். பசி உண்டாகும். தலை சம்பந்தப்பட்ட நோய்கள், சீதளம்,

குடல் புண், வயிற்று வலி, பல்வலி, ஆசன வலி மற்றும் ஆஸ்துமா குணமாகும்.

*மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம் பூ மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளை உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். ஒரு மாத்திரை வீதம் இருவேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.

*இருமல் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலை காய்ச்சாமல் அதில் சிறிது மிளகையும், மஞ்சள் தூளையும் கலந்து குடித்துவர குணமாகும்.

*மிளகுத்தூள், வெங்காயம், உப்பு சம அளவு சேர்த்து அரைத்து புழு வெட்டு உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர புதிய தலை முடி வளரும்.

திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இருவகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே பயன்படுத்துவார்கள்.

*திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், ஜுரம், சளி ஆகியவை குணமாகும்.

*திப்பிலியை பொடி செய்து, குப்பைமேனியை முழு செடியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, சம அளவு திப்பிலியை கலந்து சாப்பிட்டு வர பவுத்திரம் தீரும்.

*திப்பிலி 5 பங்கும், தேற்றான் விதை மூன்று பங்கு அளவும் பொடி செய்து, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து இருவேளை வீதம் மூன்று நாட்கள் குடித்து வர பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

தொகுப்பு: எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

Related News