இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சம் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என கூறி வந்தோம். இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.