சொமட்டோ, சுவிக்கி தொழிலாளர்கள் மின்சார பைக் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
விருதுநகர், ஜூலை 26: ‘கிக்’ தொழிலாளர்கள் மின்சார பைக் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் காளிதாஸ் வெளியிட்ட தகவல்: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களை அதிக அளவில் பதிவு செய்ய மாவட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் இணையம் சார்ந்த ‘கிக்’ தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தால் இன்று விருதுநகர் மதுரை மெயின்ரோட்டில் உள்ள கே.எப்.சி. ஹோட்டல், ராஜபாளையம் ஆனந்தா விலாஸ், சிவகாசி விஜயம் மெஸ் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
பதிவு பெற்ற இணையம் சார்ந்த ‘கிக்’ தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் இருசக்கர மின்சார வாகனம் வாங்க மானியம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.இருசக்கர மின்சார வாகனம் மானியத்தில் வாங்க www.tnuwwb.tn.gov.in என்ற இணைதளத்தில் உறுப்பினரின் நலவாரிய அட்டை, ஆதார் ஆவணம், ரேசன்கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், இ.ஸ்கூட்டர் பெயர் மற்றும் விலைப்புள்ளி, வருமானசான்று, வேலை செய்வதற்கான 6 மாத சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து மானியம் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.