ரயில் மோதி வாலிபர் சாவு
ராஜபாளையம், மே 13: வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவம் மகன் ராபின்(27). இவர் வில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று காலை சத்திரப்பட்டி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராபின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement