குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
நெல்லை, ஜூன் 7: மானூர் அருகே அடிதடி, வழிப்பறி உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள எட்டான்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் குமார் (19). இவர் மீது அடிதடி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் மானூர் காவல் நிலையத்தில் உள்ளன. இவர் வேறு ஒரு வழக்கில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டி நெல்லை எஸ்பி சிலம்பரசன், மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீசார் நேற்று பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement