மொபட் திருடிய வாலிபர் கைது
ஈரோடு, ஆக.8: ஈரோடு மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜோதி (47). இவர் தனது மொபட்டை வீட்டிற்கு முன்பாக நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்து பார்த்த போது காணவில்லை. இதையடுத்து ஈரோடு வடக்கு போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மொபட் திருடிய ஈரோடு வீரப்பன்சத்திரம், திருமலை வீதியை சேர்ந்த கணேசன் மகன் அழகேசன் (23) என்பவரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement