கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
தேன்கனிக்கோட்டை, பிப்.18: தேன்கனிக்கோட்டையில் டாஸ்மாக் கடை அருகே, வாலிபர் ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ நாகராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில், பிளாஸ்டிக் கேரிபேக்குடன் நின்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த கேரி பேக்கில் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் தேன்கனிக்கோட்டை நேதாஜிரோடு ஜிலானி மகன் அஜித்(27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.