முதியவரை தாக்கிய வாலிபர் கைது
நெல்லை, ஆக. 17: நெல்லை மாவட்ட ஊரகப்பகுதியில் தெருக்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் வைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் வீட்டிற்கு ஏதிரே வைக்கப்பட்ட தண்ணீர் குழாயில் பாப்பாக்குடி அருகே வழுத்தூர், தெற்கு தெருவை சேர்ந்த கந்தசாமி (71) என்பவரும், அவரது மனைவியும் குடத்தில் தண்ணீர் பிடித்தனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி என்ற ஆறுமுகம் என்பவரது மகன் மணிகண்டன் (22) என்பவர் அங்கு சென்று தங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள குழாயில் தண்ணீர் வரவில்லை எனக்கூறி தரையில் பதிக்கப்பட்ட குழாயை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட கந்தசாமியை கன்னத்தில் அறைந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
Advertisement
Advertisement