கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு இளம் அக்னி சிறகு விருது
கோவில்பட்டி, ஜூன் 12: போதையில்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தியது. இந்த மாநில அளவிலான போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதியதில் 69 சிறுகதைகள் தேர்வாகி அதனை புத்தகமாக பதித்து கடந்த 7ம் தேதி திருச்சி கலையரங்கில் வெளியிடப்பட்டது. இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 6 பேரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கு “இளம் அக்னி சிறகுகள் விருது” ஐ.ஐ.டி திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார். இதில் மாணவ -மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.