இன்று உலக வெறி நோய் தடுப்பு தின தடுப்பூசி முகாம்
தா.பழூர், செப். 28: அரியலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை உடையார்பாளையம் வட்டம் தா. பழூர் கால்நடை மருந்தகம் சார்பில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு தடுப்பு ஊசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பொதுமக்கள் இன்று காலை 9 மணியளவில் தா பழூர் கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் (WORLD RABIES DAY, SEPTEMBER 28) தினத்தினை முன்வைத்து செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி பணி நடைபெறுகிறது.
தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சென்னை பிராணிகளான பூனை நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்த செல்லப் பிராணிகள் மேலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நோய் ஏற்படாவணம் தடுப்பூசி செலுத்தி வருகிறது. மேலும் இன்று உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு தாங்கள் தங்களின் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.