வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை நீரில் தவறி விழுந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பலி: ரயில்வே போலீசார் விசாரணை
Advertisement
விசாரணையில், உயிரிழந்த நபர் பெரம்பூர் மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோயில் லைன் பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பதும், இவருக்கு திருமணமாகி கலாவதி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும், மாலினி என்ற மகளும் இருப்பது தெரிய வந்தது. இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாசர்பாடி ஜீவா பகுதியில் டிக்கெட் வாங்க வரும்போது கால் தவறி சுரங்கப்பாதையில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறது. முருகனின் பிரேத பரிசோதனை முடிவில் தான் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும் என பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் தெரிவித்தனர்.
Advertisement