வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம்
வேலாயுதம்பாளையம், டிச.7: கரூர் மாவட்டம் புகளூர் அருகே சொட்டையூர் ஓனவாக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி (57). இவர் தனது சைக்கிளில் புகழூர் நகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டார். அப்போது வேலாயுதம்பாளையம் காகித ஆலை செல்லும் தார்ச்சாலையில் புகழூர் நகராட்சி அலுவலகம் எதிரே சாலையை கடக்க சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் பாலசுப்ரமணியன் (35) என்பவர் நல்லசாமி மீது மோதியுள்ளார். இதில் நல்லசாமி நிலைதடுமாறி சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .
அக்கம்பக்கத்தினர் நல்லசாமியை மீட்டு அருகில் உள்ள வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நல்லசாமி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி, பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.