ரயில் மோதி தொழிலாளி பலி
பழநி, மார்ச் 4: பழநி அருகே மொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீரமணி (40). கட்டிடத் தொழிலாளி. திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று டி.கே.என் புதூர் ரயில்வேகேட் அருகில் ரயில்பாதையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், வீரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.