பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி
பந்தலூர், ஜூலை 9: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (41), இவர் நேற்று காலை கீழ்நாடுகாணி பகுதியில் இருந்து கூலி வேலைக்கு மசினகுடி பகுதிக்கு பைக்கில் சென்ற போது பாண்டியார் குடோன் பகுதியில் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் மலப்புரம் பகுதிக்கு லோடு ஏற்றி வந்த லாரி எதிரே வந்த பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ஜெயராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிதார்.