பெயிண்டரை தாக்கிய தொழிலாளி கைது
சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம் அடுத்த நெடுங்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (58). பெயிண்டரான இவர், சம்பவத்தன்று இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த இதேபகுதியை சேர்ந்த தொழிலாளி மாயாண்டி முத்து (40) அவரை அவதூறாக பேசியதுடன் அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த மாரிமுத்துவை பொதுமக்கள் மீட்டு சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்கு பதிந்து மாயாண்டி முத்துவை கைது செய்தார்.