தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி, ஷூக்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் மர சிற்பம்

புதுச்சேரி, மே 24: ஆபரேஷன் சிந்தூரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ராணுவ வீரர்களின் துப்பாக்கி, தொப்பி மற்றும் ஷூ ஆகியவற்றிற்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது போன்ற மர சிற்பங்களை தத்ரூபமாக உருவாக்கி அரசு கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். புதுச்சேரியை அடுத்த சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (19). புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண் கலை அறிவியல் பயின்று வருகிறார். இவர் பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும் மரப் பொருட்களை வைத்து பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு சிலைகள், விலங்குகள், பறவைகள், தேசத் தலைவர்களின் உருவ பொம்மைகள் மற்றும் மர சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.

Advertisement

அந்த வகையில் இந்தியா-பாகிஸ்தான் போரில் ஆபரேஷன் சிந்தூரின்போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட்ட தென்னைமர ஓலைகள், தென்னை மர நாறு, பனைமர பொருட்கள், பாக்குமரத் தட்டுகள், மூங்கில், கம்பு மற்றும் சோள தட்டுகள் பிளாஸ்டிக் பொருட்கள், பஞ்சு வகைகள் உள்ளிட்ட வேஸ்ட் பொருட்களைக் கொண்டு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, அவர்கள் அணியும் தொப்பி மற்றும் ஷூ போன்றவைகளை உருவாக்கியும், போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவது போன்றும் தத்ரூபமான சிற்பங்களை உருவாக்கி சிற்ப கலையில் அசத்தியுள்ளார்.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள நுண்கலை பயிற்சி மையத்தில் உருவாக்கிய ராணுவ வீரர்களின் படைப்பை ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். மேலும் சிலர் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்து கொண்டும் செல்கின்றனர். போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தும் விதமாக மரப் பொருட்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்திலும் வைரலாகி ‌வருகிறது. மாணவன் ஜெகதீஷ் சேலியமேடு அரசு பள்ளியில் பயிலும்போது உமாபதி என்ற ஆசிரியரிடம் நுண் கலையை கற்றுக் கொண்டார்.

Advertisement

Related News